ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி கூட்டணி

இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாஸ் (எ) பாஸ்கரன். ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. முழு நீள காமெடி படமாக இருந்தாலும் இடை இடையே வரும் சென்டிமெண்ட்  காட்சிகள் ரசிகர்களின் மனதை தொட்டது. யுவனின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.

கால்ஷீட் கிடைக்குமா?

பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா தற்போது கேப்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா பல மொழி படங்களில் முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து வருகிறார். காமெடியனாக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். இதனால் இவர்கள் அனைவரும் கால்ஷீட் கொடுத்தால், அடுத்த பாகம் நடைபெறும் எனவும் தற்போது இதற்கான பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here