நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு Netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் Netflix தளத்தின் ஒப்பந்தத்தை விக்னேஷ் சிவன் மீறிவிட்டார் என்ற தகவல் வெளியாகி வந்தன. இதனால், கடந்த சில நாட்களாகவே விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து Netflix பின்வாங்கிவிட்டதாகவும், தாங்கள் கொடுத்த ரூ.25 கோடியை திருப்பித்தர வேண்டும் என தம்பதிக்கு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்போது Netflix நிறுவனம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வெட்டிங் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் Netflix வருவதை எண்ணி நாங்கள் சந்தோஷப்படுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.