இங்கிலாந்தில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தில் சீன வீரர் Zhou Guanyu ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸின் பிரிட்டிஷ் ஜிபி கார் ரேஸில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் முதல்-லேப்பின் போது F1 கார்ஸ் இடையே ஏற்பட்ட ஆரம்பகட்ட மோதலில் சீன வீரர் Zhou Guanyu-வின் கார் திடீரென சுழன்று தடுப்புகளில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் Zhou Guanyu லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் Zhou Guanyu கூறியிருப்பதாவது; “நான் நன்றாக இருக்கிறேன், எல்லாம் சரியானது. Halo இன்று என்னைக் காப்பாற்றியது. உங்கள் அன்பான விசாரிப்புக்கு அனைவருக்கும் நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.