விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை அருகே மிக விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்வீகமாக கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் பெரியப்பா உள்ளிட்ட ரத்த பந்த உறவுகள் இன்னும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் திருமண செய்தியை கேட்டு அவரது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் லால்குடியில் இருக்கும் சொந்தங்களையும், ஊராரையும் திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் அழைக்காதது அவர்களை வேதனையடையச் செய்துள்ளது.















































