கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா நேற்று திருமணம் செய்துகொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இவர்களது திருமண விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சரத்குமார், கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன்,  இயக்குனர்கள் அட்லீ, மோகன் ராஜா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டும் புகைப்படத்தை விக்னேஷ் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி டிரெண்டானது. இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவி நயன்தாரா ஆகியோர், திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். ஏழுமலையான் கல்யாண உற்சவ சேவையில் இருவரும் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here