இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் தனது திருமண புகைப்பட்டத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

காதல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களது ஜோடிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் விக்னேஷ் – நயன்தாரா திருமணம் எப்போது என தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

திருமணம்

இந்த நிலையில், நயன்தாராவுக்கும் தனக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 10.25 மணியளவில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இவர்களது திருமணத்தில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய்சேதுபதி, சரத்குமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மோகன் ராஜா, அட்லி, தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் உள்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

வெளியானது புகைப்படம்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தின் போது புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் அவர்களது திருமண புகைப்படங்களை பார்க்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களது ஏக்கத்தை தீர்ந்து மகிழ்ச்சி அடையும் வகையில், தங்களது திருமண புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு காதலுடன் முத்தமிடும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here