நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சையும் குத்தி கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது.
திருமணம்?
காதலர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். சமீபத்தில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று தங்களது வேண்டுதல்களை அவர்கள் நிறைவேற்றி வந்தனர். இந்த நிலையில், விக்னேஷ் சிவனும் – நயன்தாராவும் வருகிற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொள்ள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.