விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பொங்கல் வைத்து பயபக்தியுடன் இருவரும் சாமி கும்பிட்டனர். நயன்தாரா வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here