சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் சரிவு

அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் ஹேப்பி

இந்த நிலையில், இன்றும் ரூ.144 குறைந்து தங்கம் விலை அதிரடியான சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.18 குறைந்து ரூ.4,737-க்கும் ஒரு சவரன் ரூ.37,896 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசு அதிகரித்து ரூ.63.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீதான விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here