மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறிப்போயுள்ளார்.
இளம் நடிகை
கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரேசா. அதனைதொடர்ந்து ‘கதகளி’, ‘கணிதன்’, ‘கடம்பன்’, ‘கதாநாயகன்’, ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’, ‘நீயா 2’ என பல படங்களில் நடித்தார். ஏராளமான தெலுங்கு படங்களிலும், ஒருசில கன்னட – மலையாள படங்களிலும் கேத்ரின் நடித்து இருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் இல்லை.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில், சமீபத்தில் கேத்ரின் தெரசா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், கருப்பு நிறப் புடவையில் இருக்கும் கேத்ரினின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை அதிர்ச்சி அடைந்தனர். உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகிவிட்டார் கேத்ரின். நல்ல உடல் வாகு கொண்ட நம்ம கேத்ரினா இது! என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.