குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என தான் பேசிய பேச்சுக்கு நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாக்ய்ராஜ், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் எனக் கூறினார். அவரது இந்த பேச்சு மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாக்ய்ராஜ், மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் தவறாக பேசியதாக நினைத்தால், புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here