பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பின்னர் விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திரைப்படங்களில் பிஷியாக நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில், காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், தனது குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், நீல் பிறந்த அந்த சில நொடி தனது மார்பில் அவன் பிடித்துக் கொண்டது, விவரிக்க முடியாத உணர்வு என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதான காரணம் அல்ல எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here