தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்.
புதிய படம்
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். தற்போது இவர் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் சந்தர் தயாரிக்கும் படத்தில், ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். அவருடன் சந்தோஷ் பிரதாப், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. இப்படத்தை சபரி கிரீசன், சரவணன் ஆகியோர் இயக்கிறார்கள்.
மீண்டும் நடிப்பு
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹன்சிகா தமிழில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.