தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு வித்தியாசமாக நிஜ கல்யாணம் போல் நிஜமான பத்திரிக்கை அடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி.

மனம் கவர்ந்த சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மக்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பர். பிக் பாஸ், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை காண தவறாத மக்களே இல்லை. எப்போதும், ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் விஜய் டிவி, மீண்டும் ஒருமுறை தனது வித்தியாசத்தை காட்டியுள்ளது.

திருமணம் நடக்குமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் தமிழும் சரஸ்வதியும் ஒன்று. டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நக்ஷத்ரா நடித்து வருகிறார். சரஸ்வதி அதிகம் படித்தவர் என பொய் சொல்லி தான் இந்த கல்யாணத்திற்கு தமிழ், கோதை அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறார். அதுமட்டுமில்லாமல் கோதை அம்மாவுக்கு இது காதல் திரும்ணம் என்பது தெரியாது. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என வில்லி திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். இத்தனை ட்விஸ்டுகளுடன் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

செம புரமோஷன்

இதற்கிடையே தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடு புரமோஷனுக்காக தமிழ் – சரஸ்வதி கல்யாண பத்திரிக்கையை விஜய் டிவி குழு சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை திருமண எபிசோடுக்கு வரவேற்று இருந்தது. இதைப் பார்த்த இணையவாசிகள், சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here