கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மஹிமா நம்பியார் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறையும் கொரோனா

இந்தியாவில் வேகமெடுத்து வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும், கட்டுப்பாடுகாளையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், அதிலிருந்து மீண்டும் வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சத்யராஜ், நடிகைகள் குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டனர்.

கடினமாக இருந்தது

அந்த வரிசையில், நடிகை மஹிமா நம்பியாரும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். குற்றம் 23, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியாருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் மகிமா நம்பியார் கூறுகையில், ‘கொரோனா ஏற்பட்ட முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது உடல் நலம் தேறி வருகிறேன். டாக்டர்கள், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கு நன்றி’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here