கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதியில் உள்ள குடோனில் சிறுத்தை ஒன்று பதுங்கியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க தீவிரம் காட்டிய வனத்துறை, குடோனின் இருபுறங்களிலும் கூண்டுகளை வைத்தது. ஆனால் கூண்டில் சிக்கிமால் அந்த் சிறுத்தை போக்குக் கட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனையடுத்து டாப்சிலிப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த சிறுத்தை விடப்பட்டது.