ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடலின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முணுமுணுக்க வைத்த பாடல்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெருவதற்கு சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த பாடல் காட்சிகளும் பெரிய வரவேற்பை பெற்றது.

வைரல் வீடியோ

‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு நடனம் வடிவமைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பாடலுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் கணேஷ் ஆச்சார்யா பிறகு அதனை அப்படியே கடைப்பிடிக்கும் அல்லு அர்ஜுனும் சமந்தாவும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here