‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், யூ-டியூப்பிலும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விவாகரத்து செய்துகொண்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார் என அந்த நபர் கூறியுள்ளார். அந்த விமர்சனத்தை பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.