குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here