தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம், நகைகளை பறித்த காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிக்பாஸ் புகழ் ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் மரியா ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு சமூக வலைதளத்தில் டிரெண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். இந்த நிலையில், அமைந்தகரை காவல் நிலையத்தில் இன்று காலை ஜூலி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் என்பவரும், தானும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இதனால் அவருக்கு இருசக்கர வாகனம், தங்க செயின், ஃபிரிட்ஜ் என ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து மனிஷ் காதலை முறித்துக் கொண்டதாக தெரிவித்துள்ள ஜூலி, தொடர்ந்து தன்னிடம் மேலும் பணத்தை பெற தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த புகார் மனுவில் ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here