விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் கொடுக்கப்படும். அந்த நாணயத்தை சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் எடுத்து மறைத்து வைத்து கொள்ள வேண்டும். விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ருதி, தாமரையின் நாணயத்தை திருடி விடுகிறார். இதனால் வரும் பிரச்சனைகள் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் காட்டப்பட்டுள்ளது. மூன்றாவது ப்ரோமோவில் ஸ்ருதி அழுது கொண்டிருக்கின்றார். இசை அவர்களை சமாதானப்படுத்துகிறார். அப்போது ஸ்ருதி, என்னுடைய வளர்ப்பு குறித்து பேசியுள்ளார், பிள்ளையா நீ என்றும் உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? என்றும் பேசியுள்ளார் என கூறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here