தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ளிமையான முறையில் வழிபாடு

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலங்கள் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவரவர் வீடுகளில் எளிமையான முறையில் விநாயகரை வழிபட்டனர். மண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய வகையிலான விநாயகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, சுண்டல், பழ வகைகள், கொழுக்கட்டை உள்ளிட்டவை படையிலிடப்பட்டது. அப்போது யானை முகத்தானை மக்கள் மனமுருகி வழிபட்டனர்.

டம்ளர் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே கோயிலுக்கு வெளியில் இருந்தும், வீடுகளில் இருந்தவாறும் எளிமையாக முறையில் வழிபட்டு வருகினற்னர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் அனுமதியின்றி கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அரசு விதிகளின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலினுள் விழா உற்சவங்கள் நடந்து வருகின்றன. சென்னை அருகே உள்ள மணலியில் 2500 சில்வர் டம்ளர்களில் 15 அடி உயரத்திலான விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சின்னக்கோடு பகுதியில் காய்கறிகள் அலங்காரத்திலான செல்பி விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு

மும்பையில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆரம்பத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. அதோடு கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது மும்பை போலீஸார் மும்பை முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். விநாயகர் ஊர்வலத்திற்கும், கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here