தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும்போது, விதி எண் 110-ன் கீழ், பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்தனர். அந்த வகையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த ஐய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமை மிகு முதல்வருக்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்களது திராவிடியன் ஸ்டார் ஸ்டாலின் அவர்கள், வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன, முயற்சிகள் வெல்கின்றன என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.