தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை அறவே கிடையாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆன்லைன் மது விற்பனை நடைமுறைப்படுத்தப்படும் என செய்திகளில் படித்ததாகவும், அதுதொடர்பான முடிவை எடுப்பதற்கு முன் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
அரசு அனுமதிக்காது
இதற்கு பதிலளித்த பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த அரசு தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனையை அறவே அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் செந்தில் பாலாஜி கூறினார்.