தனது உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரசிகர்களை நடிகை ஷகிலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பிசி நடிகை
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஷகிலா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஷகிலா நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்து, சிறிது காலத்திலேயே அவர் புகழின் உச்சிக்கு சென்றார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஷகிலா பிசியாக நடித்து வருகிறார்.
யாரும் நம்பாதீங்க
இந்த நிலையில் நடிகை ஷகிலாவின் உடல்நலம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தன்னைப்பற்றி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும் தான் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருப்பதாகவும் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், தன்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த அன்பை தெரிந்துகொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் தனது நன்றி என ஷகிலா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.















































