தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கவலை

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தங்கம் விலையேற்றம் மேலும் கவலையளிப்பதாக உள்ளது.

விலை உயர்வு

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.36,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,562-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here