அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர். எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவியதால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று காலை சுமார் 3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here