நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் ஜோக்கர் துளசி. மருதுபாண்டி படத்தின் மூலமாக 1990-ல் திரையுலகில் அறிமுகமானார் துளசி. அதனைதொடர்ந்து உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்காளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோக்கர் துளசி, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here