இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், முழு ஊரடங்கை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கொரோனா சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். அரசு உத்தரவுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.















































