திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி அணை வனப்பகுதியில் உலா வந்த யானைகளை, பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், இளைஞர்களும் சேர்ந்து கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பத்திற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.