மே 1-ம் தேதி ஊரடங்கிற்கு அவசியமில்லை எனவும் மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழிலாளர் தினத்திற்கு பொது விடுமுறை என்பதால் மே 1-ம் தேதி சனிக்கிழமையன்று முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here