அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தொடர்ந்து சூது கவ்வும், இறுதிச்சுற்று, ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் சந்தோஷ் நாராயணன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பறை இசை கலைஞர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.