கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க நடிகை சாய் பல்லவி மறுத்ததால், அவருக்கு பதில் நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ சச்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அய்யப்பனாக பீஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரிக்கும், அதிகார வர்க்கத்தில் உள்ள நபருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

ரீமேக்

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமத்தை தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். அதேபோல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர்.

நடிக்க மறுப்பு

‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை நித்யா மேனன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here