15 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை நடிகை திரிஷா ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மெகா ஸ்டார்

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சிரஞ்சீவி நடித்துள்ளார். சிரஞ்சீவி தற்போது ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

‘லூசிபர்’ ரீமேக்கில் திரிஷா?

‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்த கையோடு, சிரஞ்சீவி மலையாள மெகா ஹிட் படமான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மோகன் ராஜா இயக்க உள்ள இந்தப் படத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘லூசிபர்’ மலையாள வெர்ஷனில் காதல் காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது. ஆனால் தெலுங்கு ரீமேக்கில் காதல் காட்சிகளை இணைக்க இயக்குநர் மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக திரிஷாவை படக்குழு தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here