‘மாஸ்டர்’ படத்திற்காக மட்டும் நடிகர் விஜய் தன்னை சந்திக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக திரைக்கு வராமல் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.

விளக்கம்

இதனிடையே, சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, நடிகர் விஜயுடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்காக மட்டும் தன்னை சந்திக்கவில்லை என்றும் நிறைய படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கப்பட்டுள்ளதால், பலர் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தாக கூறியுள்ளார். எனவே அந்த எல்லா படங்களையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு உதவி செய்யுமாறு விஜய் கேட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here