வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 25-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாள்தோறும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசலை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 ஆயிரம் விஐபி தரிசன டிக்கெட்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.28 கோடி வருவாய்

ரூ.11 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதன் மூலம் தேவஸ்தானத்திற்கு 22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சிறப்பு தரிசனத்திற்காக ரூ.300 கட்டணத்தில் 2 லட்சம் டிக்கெட்கள் விற்கப்பட்டதன்மூலம் தேவஸ்தானத்திற்கு மொத்தம் ரூ.6 கோடி வசூலாகியுள்ளது. மொத்தமாக வைகுண்ட ஏகாதசி விழாவின் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ.28 கோடி வருவாய் வந்துள்ளது.

தேவஸ்தானம் அறிவுறுத்தல்

உள்ளூர் பக்தர்களின் வசதிக்காக 24-ம் தேதி திருப்பதியில் 5 இடங்களில் 1 லட்சம் இலவச தரிசன டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உரிய முன்பதிவு டிக்கெட்களை வைத்திருக்க வேண்டும் என்றும் தங்குவதற்கும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. தரிசன டிக்கெட்கள் இன்றி திருமலைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here