தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருபது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

முன்னணி நடிகை

மாடலிங் துறை மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரன் மற்றும் மகேஷ் பாபு என அனைவருடனும் ஜோடி சேர்ந்து தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். தமிழ் சினிமா பக்கம் வந்த அவர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அவரது அண்ணன் சூர்யாவுடன் என்ஜிகே போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் என வரிசையாக நடித்துக்கொண்டு வருகிறார்.

கொரோனா உறுதி

சில தினங்களுக்கு முன்பு நடிகை ரகுல் பிரீத் சிங் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக ஆயத்தமாகி வந்த அவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரகுல் பிரீத் சிங்க் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது; “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”.
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here