சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம் என்ற திடுக்கிடும் தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தூண்டியது யார்?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களையும், சக நடிகர், நடிகைகள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட பின், நேற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. ரசிகர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்திய அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர்.

திடுக்கிடும் தகவல்

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மது அருந்திவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக போலீசார் தொரந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சித்ராவின் தாயாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here