சட்டமன்றத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியலில் ஐஏஎஸ் அதிகாரி

விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை வரவேற்று, பொதுச் செயலாளராகவும் நியமித்தார்.

ஆதரவு கேட்பேன்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கட்சியில் நல்லவர்கள் வரவேண்டும் என்பதற்கு உதாரணமாக ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு வந்துள்ளார் என்றும் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததற்கு பாராட்டுவதாகவும் கூறினார். அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? எனப் பேசிய அவர், ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றார். 2021 தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் போட்டி போடுவேன். அரசியலுக்கு வரவில்லை என்றால் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்றும் கமல் தெரிவித்தார். டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here