சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பிரபல நடிகை ஹூமா குரேசி கூறியுள்ளார்.

காதலி கைது

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுக்கப்பட்டார். இவரது மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்த வழக்கில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். இதுதொடர்பாக சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். பல நாட்கள் சிறையில் இருந்த நிலையில், சமீபத்தில் ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

வெட்கித் தலைகுனிய வேண்டும்

ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகை ஹூமா குரேசி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ரியா சக்ரபோர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தக் கொலைச் சதி பற்றிப் பேச ஆரம்பித்த நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். உங்களது நோக்கம் நிறைவேற ஒரு பெண்ணின், அவரது குடும்பத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது குறித்து நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்”. இவ்வாறு ஹூமா குரேசி தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here