அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக கூறியிருந்தார்.
தொற்று உறுதி
இந்நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாக கூறி உள்ளார்.