மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எஸ்.பி.பி.யின் மறைவுச் செய்தி, திரையுலகிரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்.பி.பி.க்கு நினைவில்லம்

தாமரைப்பாகத்தில் எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களும், தங்களது பங்களிப்புடன் நினைவில்லம் கட்ட வேண்டும் என்று கிராம மக்களும், எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரணிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், தனது தந்தைக்கு அழகான நினைவில்லம் அமைக்கப்படும் என்றும் ஒரு வாரத்தில் அதற்கான தகவல் வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் காவல்துறையினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் எஸ்.பி.சரண் கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here