நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த முறை சிறிய மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
‘பிக் பாஸ்‘
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசன்களையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள்? யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள்? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும், குழப்பங்களும் இருந்து கொண்டே இருந்தது.
இம்முறை சில மாற்றம்
இந்த நிலையில், கடந்த 3 சீசன்களில் 16 போட்டியாளர்கள் கொண்டதாகவும், 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியாகவும் இருந்த பிக் பாஸில், இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக போட்டியாளர்கள் குறைக்கப்படும் என்றும் பிக் பாஸ் நடக்கும் நாட்களும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதாவது 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும், 80 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் போட்டி தொடங்கும் முதல் நாளில் தான் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், எத்தனை நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்பது குறித்த உறுதியான தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.