பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது சமூக வலைத்தளங்களும் தீனி போட்டு வருகிறது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள் என்றும் யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும், குழப்பங்களும் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

போட்டியாளர்கள்?

யார் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள், அங்கு யாரெல்லாம் காதல் ஜோடியாக உலா வரப் போகிறார்கள், யாருடன் சண்டை போடப் போகிறார்கள், என்ன நடக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பல நடிகைகளின் பெயர்களை கூறி, இவர்கள் உள்ளே செல்ல போகிறார்களா? அவர்கள் உள்ளே செல்ல போகிறார்களா? என்று பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது 11 பேரின் பெயர்கள் வெளியாகி, இவர்கள் தான் கண்டிப்பாக ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் செல்லப் போகிறார்கள் எனப் பேசப்பட்டு வருகிறது. சனம் ஷெட்டி, கிரண் ரத்தோட், ராமன், ஷாலு ஷம்மு, ரியோ ராஜ், அமுதவாணன், அமிர்தா ஐயர், ஷிவானி நாராயணன், புகழ், ஆர்.ஜே. வினோத், பாலாஜி முருகதாஸ் போன்ற பலரும் பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் எதிர்பார்ப்பை கூடும் விதமாக, கமலின் ஹேராம் படத்திலும், அஜித்துடன் சிட்டிசன் படத்திலும் ஜோடியாக நடித்த நடிகை வசுந்தரா தாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக சொல்லப்படுகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களுக்கு தீனி போட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here