இந்தி மற்றும் கன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் சூடிபித்துள்ள நிலையில், தெலுங்கு திரையுலகிலும் போதைப் பழக்கம் அதிகமாக இருப்பதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம்

கடந்த சில மாதங்களாகவே சினிமா துறையில் போதைப் பழக்கம் பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. பெங்களூரில் போதைப் பொருள் விற்றதாக டிவி நடிகை அனிகா மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட MDMA போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்டதாகவும், அதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன.

கைது, விசாரணை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாலிவுட்டையும் போதைப் பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில், பாலிவுட்டில் உள்ள பல முக்கிய நடிகைகளுக்கு பங்கு உள்ளதாக ரியா வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. அவர் கொடுத்துள்ள லிஸ்ட்டில் முக்கிய நடிகைகளான ரகுல் பிரீத் சிங்கும், சாரா அலி கானின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 25 முன்னணி நடிகைகளின் பெயர்களை ரியா வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரகுலும், சாராவும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தி, கன்னட திரையுலகைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகிலும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. விஷாலுடன் ‘ஆம்பள’ திரைப்படத்தில் நடித்த நடிகை ‘மாதவி லதா’, தெலுங்கு வட்டாரத்திலும் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் கவனம் செலுத்திய அதிகாரிகள், டோலிவுட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் போதைப் பழக்கம் சர்வ சாதாரணமாக இருந்து கொண்டிருப்பதாகவும், லாக்டவுன் சமயத்தில் நடந்த பார்ட்டிகளில் போதைப் பொருள் அதிகமாக புழக்கத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் புழக்கத்திற்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாதவி, இச்சமயத்தில் இதைப்பற்றி பேசினால் தான் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் மாதவி லதா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here