‘பிக் பாஸ்’ சீசன் 4 புரொமோ வீடியோ வெளியாகி கடந்த 48 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பிக் பாஸ்
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலையும் தூண்டியுள்ளது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு
அதனைதொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4க்கான மற்றொரு புரொமோ வீடியோவை வெளியிட்டு விஜய் டிவி நிர்வாகம் அசத்தியது. நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இந்த புதிய புரொமோ முழுக்க முழுக்க கொரோனா வைரஸ் பாதுகாப்பைப் பற்றியும், மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் கொரோனா பிரச்சனைகளை அழகாகவே காட்டியுள்ளனர். இந்த புரொமோ 48 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும் வேலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. ஒவ்வொரு சீசனிலும் சண்டை, காதல், பாசம் என்ற கலவையோடு ரசிகர்களுக்கு விருந்தளித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் யார் காதல் ஜோடியாக இருக்கப்போகிறார்கள், யார் யாருடன் சண்டை இழுக்க போகிறார்கள் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். “தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லத தட்டிக் கொடுப்பேன்” என்ற பஞ்ச் டயலாக் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் அல்ல, கமலின் அரசியல் வாழ்க்கைக்கும் கச்சிதமாகவே பொருந்துகின்றது.