முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்த மீரா மிதுன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது என நடிகர் கமல்ஹாசனுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சர்ச்சை நாயகி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன், தொடர்ந்து தமிழ் சினிமாவையும் முன்னணி நடிகர், நடிகைகளையும் விமர்சித்து வருகிறார். சூர்யா, விஜய் ஆகியோரை தொடர்ந்து வம்பிழுத்து வந்த மீரா, அவர்களது மனைவிகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி, ரசிகர்களிடம் செமயாக வாங்கிக் கட்டிக்கொண்டார். மீரா மிதுனை நடிகர்கள் ஒரு பொருட்டாக நினைக்காததையடுத்து, தற்போது அவர் பிக் பாஸை கையில் எடுத்துள்ளார். எதைப்பற்றி எப்படி, எப்போது பேசினால் ரீச் கிடைக்குமென்பதை நன்கு தெரிந்த மீரா மிதுன், ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு முன்னணி நடிகர்களை வம்பிழுப்பதை தனது வேலையாகவே கொண்டுள்ளார்.
மிரட்டும் மீரா
‘சூரரைப் போற்று’ திரைப்படம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தபோது சூர்யாவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த மீரா, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் கமலைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளார். “பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்கும், தீர்ப்பு கொடுப்பதற்கும் உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை மிஸ்டர் கமல்ஹாசன்” எனக் கூறி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் மீரா கூறியிருப்பதாவது; என்னிடம் தவறாக நடந்து கொண்ட சேரனுக்கு ஆதரவாக பேசி, என்னை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய நீங்கள், ஒரு நடுவராக ஒழுங்கான தீர்ப்பை கொடுக்கவில்லை. எனவே, நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த சரியான ஆளே இல்லை. நான் உங்கள் மீது வழக்கு தொடர்வேன். இந்த வருடம் உங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தவே முடியாது. இவ்வாறு மீரா மிதுன் மிரட்டியுள்ளார்.
நெட்டிசன்ஸ் கிண்டல்
இதுவரை சூர்யா, விஜய் பற்றி பேசி வந்த மீரா மிதுன், தற்போது கமல்ஹாசனை குறி வைத்ததால், நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து கம்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் கமல் ரசிகர் குறிப்பிட்டிருப்பதாவது “சூர்யாவுக்கும், விஜய்க்கும் இருப்பவர்களெல்லாம் ஃபேன்ஸ், ஆனால் கமலுக்கு இருப்பவர்கள் வெறியர்கள், வெளியே தலை காட்டிடாத” எனக் குறிப்பிட்டுள்ளார். “யார் யாரெல்லாம் கமலை மிரட்டுவது என்று ஒரு தகுதி இல்லாமல் போய்விட்டது” என்று ஒரு நெட்டிசனும், உனக்கு இதே வேலையாப் பேச்சு, என்னதாம்மா உனக்கு பிரச்சனை?, அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில ஆண்டவரையே குறை சொல்றியா?” என பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கின்றனர்.