நிறைமாத கர்ப்பினியாக இருந்த நடிகை மைனா நந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சின்னத்திரை புகழ்

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த சீரியலில் நடித்ததால் இவருக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. அதனால் பல ரசிகர்களும் இவரை மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கின்றனர். அதன்பிறகு பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சீரியல்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வம்சம், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் மைனா. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் இவர் நடித்திருந்தார். கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்த பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பிறகு இவரது கணவரான கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில ஆண்டுகள் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்த நந்தினி, கடந்த நவம்பர் மாதம் சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

வளைகாப்பு டான்ஸ்

கர்ப்பமாக இருந்த நந்தினிக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வளைகாப்பு நடந்து முடிந்த கையுடன், தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், செல்ஃபி புகைப்படங்களையும் இனையத்தில் நந்தினி பதிவிட்டார். இந்நிலையில், தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “குட்டி யோகி வந்தாச்சு” என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை பிறந்துள்ளதையடுத்து மைனா நந்தினிக்கு ரசிகர்களும், நடிகர், நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here