நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்த கதை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கின்றது .

நயன் என்ட்ரி
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழியிலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா .தமிழில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் நயன். முதன் முதலில் அவர் நடிகையாக அறிமுகமான திரைப்படம் ‘மனசினக்கரே’ . அதன் பிறகு தமிழில் ‘ஐயா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, இப்போ கெத்தாகவே இருக்கிறார் நயன். இந்த கதை எல்லாம் ஒரு பக்கமிருக்க, நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு எப்படி என்ட்ரி ஆனார் என்ற கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஓடி வந்த நயன்
மலையாளத்தில் அவர் நடித்த முதல் படம் ஹிட்டாக அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்து .மோகன்லாலும் நயன்தாராவும் நடித்த திரைப்படம் நான்’விஷ்மயாதும்பத்து ‘இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மலையாள பத்திரிக்கையில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்த தமிழ் இயக்குனர்கள் அவரை தமிழில் அறிமுகம் செய்து வைக்கவும் முயற்சி செய்தனர். மலையாள சினிமா துறையில் அஜித் என்பவர் சில நடிகைகளுக்கு மேனேஜராக பணிபுரிந்து உள்ளார். அவரை நயன்தாராவிற்கும் மேனேஜராக இருந்துள்ளார். தமிழில் அறிமுகம் பற்றி அஜித் நயன்தாராவிடம் சொல்ல, அன்று நயன்தாராவிற்கு சூட்டிங் இருந்ததால் சென்னைக்கு வர கஷ்டப்பட்டு எப்படியோ சென்னைக்கு வந்து இறங்கி விட்டார். ஆடிஷனுக்கு சென்ற நயன்தாரா அந்த ஆடிஷனில் கலந்து கொண்டார். சில காட்சிகளை எடுத்து பார்க்கும் பொழுது, நயன்தாரா அப்படத்தில் நடிக்க ஹீரோ ஒப்புக் கொள்ளவில்லையாம் பார்ப்பதற்கு அக்கா மாதிரி இருக்காங்க வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம் அந்த ஹீரோ.அவர் தான் தனுஷ். அவர் வேண்டாம் என்று சொன்ன திரைப்படம் தான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘சுள்ளான்’.அந்த படம் ஓடவே இல்லை என்பதெல்லாம் வேற விஷயம். பிறகு ‘ஐயா’என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா தமிழில் என்ட்ரி கொடுக்க, நடித்த அனைத்து படங்களுமே மெகா ஹிட்டானது.

முன்னணி நடிகர்கள்
மேலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தது. பிறகு தனது உடல் எடையை சூப்பர்ராக குறைத்து கச்சிதமான உடல் எடையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் . பிறகு அதே ஹீரோவுடன் இணைந்து நடித்த திரைப்படம் ‘யாரடி நீ மோகினி’ மெகா ஹிட்டானது. நயன்தாரா சினிமாவுக்கு வந்த பிளாஷ்பேக் கதைகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரண்டாக பரவிக் கொண்டிருக்கின்றது.