பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமனின் திருமண நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்துள்ளது. திரையுலகினர் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

காமெடி நடிகை

பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமின் மகளான வித்யூலேகா ராமன் “நீ தானே என் பொன்வசந்தம்” என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின்னர் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘காக்கிச்சட்டை’, ‘மாஸ்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘புலி’, ‘வேதாளம்’ போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து வரும் அவர், தமிழை விட தெலுங்கில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யுலேகா, கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மடங்கு தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி

இந்த நிலையில், தற்போது தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வித்யுலேகா தெரிவித்திருக்கிறார். சஞ்சய் என்பவருடன் நடந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். வித்யுவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 26ஆம் தேதி எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டோம். இப்போது போட்டோவிற்காக மாஸ்க் நீக்கி உள்ளோம். உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மாலையும் கழுத்துமாக இருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் வித்யுலேகாவிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here